Welcome To My Homepage

About My Athoor Welcome To My Homepage Contact

அளவிட முடியா அழகு கிராமம் என் ஆத்தூர் In english click about page

 
இயற்கை அழகு கொட்டி கிடக்கும் எழில்மிகு குறு நகரம் , ஏறு பூட்டி சோறு போடும் விளைநிலம் நிறைந்த , ஏரிகள் குளங்கள் நிறைந்த செழிப்பான பெரும் கிராமம்.சொல்ல முடிவில்லா சிறப்புகள் கொண்ட எனது மண்ணைப் பற்றி ஒரு குருந்திரட்டு இந்த வலை பக்கம். வாங்க ஊருக்குள் போகலாம்............

ஊர் பெயர் காரணம்

மேற்கு தொடர்ச்சி மலையில் துளியாக உருவாகி , உறுமாரி, ஆறாகி தவழ்ந்து , ஊரை இரு கூராக்கி வளமக்கியதால் ஆற்றூர் ஆகியது. வழக்கு மொழி பேச்சில் ஆத்து ஊர் ஆத்தூர் ஆயிற்று

சரித்திர புகழ் பெற்றோர்

மாரிமுத்து ஸ்வாமிகள் ,
முக்காட்டு அசரத் ,
பாதர் மொந்தோ 

வழிபாட்டு ஸ்தலங்கள்

 
மாவட்டத்தில் புகழ்பெற்ற பல லட்சம் மக்கள் வழிபட்டுச் செல்லும் சடையாண்டி கோவில் , வண்டிகாளி அம்மன் கோவில் , மாரியம்மன் கோவில் , ஆகம விதிப்படி அமைந்த விசாலாட்சி அம்மன் கோவில் காசி விஸ்வநாதன் ஆலயம் நூற்றாண்டு கால பழமை மிக்கது. இங்குள்ள சிவ லிங்கம் காசியில் அமைந்துள்ள லிங்கம் போன்ற தோற்றம் கொண்டது. எனவே காசி செல்ல இயலாதோர் இங்கு வந்து தரிசனம் செய்தால் காசி சென்ற பலன் கிடைக்கும் என்பதாக நம்மபப்படுகிறது , சர்க்கரை விநாயகர் கோவில், கன்னிமார் கோவில், ஆத்துப்பிள்ளையார் கோவில், சீத்தா ராமன் கோவில், தாமரை விநாயகர் கோவில், புத்தர் கோவில், ஐயப்பன் மண்டபம் , மசூதி, புனித மேரி ஆலயம் , புனித அந்தோனியார் ஆலயம், இன்னும் ......... இவற்றில் சில ஆலயங்கள் எங்கள் மூதாதையரால் உருவாக்கப்பட்டவை.

நீர் நிலைகள்

காமராஜர் நீர் தேக்கம் , பிள்ளிவெட்டி குளம் , கருங்குளம், நடுக்குளம், தாமரைகுளம், சீத ராமன் குளம் ஆகியன எங்கள் ஊரை செழிப்பான வளமான பகுதியாக வைத்துள்ளது . இதில் காமராஜர் நீர் தேக்கம் ஆத்தூர் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.